Rolex vs Dilli: 28ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா! ஒரே மேடையில் டில்லி – ரோலக்ஸ் மீட்டப்!!
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
நடிகர் கார்த்தி தற்பொழுது, எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கிய ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 18ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஜப்பான் அவரது 25வது திரைப்படம் என்பதால், இந்த விழாவுக்கு கார்த்தியின் முந்தைய 24 படங்களின் இயக்குநர்களை அழைத்து சிறப்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
JAPAN: கர்மா-னா என்னனு தெரியுமா உனக்கு? டப்பிங் வேலையை தொடங்கிய கார்த்தி!
முன்னதாக, கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பி என்பது அனைவரும் அறிவீர், ஆனால், இவர்கள் இருவரும் சினிமா என்று வரும்பொழுது, ஒருவருக்கொருவர் எதிரிகள் என்றே சொல்ல வேண்டும்.
அட… அது வேற ஒன்றும் இல்லங்க, இதற்கு இயக்குனர் லோகேஷ் தான் காரணம். கைதி படத்தில் நடித்த (டில்லி) கார்த்தியை விக்ரம் படத்தில் நடித்த (ரோலக்ஸ்) சூர்யா தேடும்படி காட்சிகளை அமைத்து திரையுலகை அலற வைத்தார். அந்த அளவிற்கு சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது.
Leo In LCU : லியோ ‘LCU’ தான்! உண்மையை உடைத்த ரோலக்ஸ் கேங்க்! கடும் அப்செட்டில் லோகேஷ்!
இந்நிலையில், விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் வருகை தந்த சூர்யாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டது. அதன்பின், இந்த டில்லி – ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து சுவாரஸ்யமாக பேசப்பட்டது. அதுபோல், இந்த முறையும் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சூர்யா வருகை தந்தால், இரட்டிப்பு ஹைப் லியோ படத்துக்கு ஏறும் என்பதில் சந்தேகம் இல்லை.