Infinix Zero 30 4G: 120Hz டிஸ்பிளே, 108 எம்பி கேமரா.! விரைவில் வெளியாகும் இன்ஃபினிக்ஸின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

InfinixZero304G

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் போட்டியிடும் விதமாக பல புதிய வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் களமிறக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

தற்போது இன்ஃபினிக்ஸ் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜி மாறுபாட்டை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 4ஜி (Infinix Zero 30 4G) பற்றி நிறுவனம் எந்த ஒரு அம்சம் குறித்த தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும் கூட அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே சில அம்சங்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

டிஸ்பிளே

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2460 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் (17.22 செ.மீ) அளவுள்ள வளைந்த அமோலெட் டிஸ்பிளேவுடன் வரலாம். இந்த டிஸ்பிளேவில் ஜீரோ 30 5ஜி-ல் இருப்பதுபோல 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுக்கு பதிலாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பிராசஸர்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனின்  வடிவமைப்பைக் கொண்டுள்ள ஜீரோ 30 4ஜி-யில் மாலி ஜி57-எம்சி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் ஆனது பொறுத்தப்படலாம். ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக்கொண்ட எக்ஸ் ஓஎஸ் உள்ளது. ஆனால் 5ஜி மாடலில் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் உள்ளது.

கேமரா

இதில் இருக்கக்கூடிய கேமராவைப் பொறுத்தவரையில் 108 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா பொறுத்தப்படலாம். முன்புறத்தில் செல்ஃபிக்காக 50 எம்பி கேமரா உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செல்ஃபியில் கூட 4k தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும்.

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதற்காக 5000mAh திறன் கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரியுடன் வரலாம். இந்த பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 4ஜி ஆனது 8 ஜிபி ரேம் +128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கலாம்.

விலை மற்றும் அறிமுகம்

இன்ஃபினிக்ஸ் ரஷ்யாவில் ஜீரோ 30 4ஜி ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். இதே நாளில் இந்தியாவில் கூட வெளியாகம் என்றும் கூறப்படுகிறது. ஜீரோ 30 5ஜி ஆனது இந்திய சந்தையில் ரூ.23,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை விட சில அம்சங்கள் குறைவாக இருக்கும் ஜீரோ 30 4ஜி ஆனது ரூ.20.999 என்ற விலையில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்