11YearsofMaattrraan : இரட்டை வேடங்களில் கண்கலங்க வைத்த சூர்யா! ‘மாற்றான்’ படத்தின் மொத்த வசூல் தெரியுமா?
சூர்யா நடிப்பில் வெளியான ‘மாற்றான்’ படம் வெளியாகி 11-ஆண்டுகள் ஆன நிலையில், படத்தின் வசூல் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம்.
மாற்றான்
மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மாற்றான்”. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். ரவிபிரகாஷ், சங்கர் கிருஷ்ணமூர்த்தி, தாரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இரட்டை வேடங்களில் கலக்கல்
இந்த மாற்றான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா அண்ணன் – தம்பி என இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இதில் ஒரு சூர்யா இல்லாத காட்சிகள் வரும் போது பார்ப்பதற்கே மிகவும் கண்ணீர் வரும் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது . சூர்யாவின் நடிப்பும் அனைவரையும் எமோஷனலாக்கியது.
11 ஆண்டுகள்
இந்த மாற்றான் திரைப்படம் இதே நாளில் (அக்டோபர் 12) 2011-ஆம் ஆண்டு தான் வெளியானது. படம் வெளியாக்க இன்றுடன் 11-ஆண்டுகள் ஆகிறது. மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் எத்தனையோ ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். அதில் இந்த ‘மாற்றான்’ திரைப்படம் முக்கியமானதாக இருக்கிறது. படம் வெளியாகி 11 ஆண்டுகள் ஆகும் நிலையில். படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகளை ரசிகர்கள் எடுத்து வெளியீட்டு படம் குறித்து நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
பட்ஜெட் வசூல்
இந்த மாற்றான் திரைப்படம் மொத்தமாக 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அந்த சமயம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 88 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.