நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்! 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை.. அமைச்சர் துரை முருகன் பேட்டி!

Tamilnadu MPs meeting today for Cauvery Isse

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை கூடுகிறது. அதன்படி, நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே ஹெல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.  நேற்று நடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அடுத்த 16 நாட்களுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்ககாவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. நேற்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம்  மற்றும் கர்நாடக சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழகத்தின் சார்பில் 15 நாட்களுக்கு தினசரி 13000 கன அடி நீர் திறக்க வலியுறுத்தப்பட்டது.

நீர்பற்றாக்குறை காரணமாக நீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. வரும் 16 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு, காவிரி ஒழுங்காற்று குழு  பரிந்துரை செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை கூடுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சமயத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாளை நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

கடந்த 18 நாட்களில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நமக்கு 4.21 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது. மேலாண்மை ஆணையம் கூறியதை ஏற்று கர்நாடகா தொடர்ந்து தண்ணீரை திறந்து வருகிறது என என்றார். இருப்பினும், உரிய நீரை காவிரியில் இருந்து கர்நாடக அரசு திறக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்