முடிவுக்கு வந்தது மோதல்… விராட் கோலியை கட்டியணைத்தது குறித்து ஆப்கன் வீரர் நவீன் ஓபன் டாக்!!
கடந்த ஐ.பி.எல் போட்டியின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்திலேயே விராட் கோலியும், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் மோதிக்கொண்ட சம்பவம் மறக்கமுடியாத சம்பவமாக அமைந்தது. இந்த சூழலில் நேற்றைய உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியும், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் ஒருவரை, ஒருவர் ஆரத்தழுவி நண்பர்களாக மாறிய இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் விளையாடிய போட்டியில், நவீன் உல் ஹக் பேட்டிங் செய்து கொண்டிருக்க, கோலி ஃபீல்டிங் செய்து கொண்டிருப்பார். அப்போது, திடீரென இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த போட்டி முடிந்து மைதானத்தில் வாக்குவாதம், மோதல் நிலவியது. இதில், லக்னோ அணியின் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் இந்த மோதலில் ஈடுபட்டார்.
பின்னர் அவருக்கும், கோலிக்கும் இடையே இன்னும் ஆக்ரோஷமாக வாக்குவாதம் நடந்திருந்தது. அந்தப் போட்டிக்குப் பிறகு நவீன் உல் ஜக், கோலியைச் சீண்டும் வகையில் பதிவிட்டு இருந்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நவீன் உல் ஹக், கம்பீர் ஆகிய இருவரும் எந்த மைதானத்திற்குச் சென்றாலும் ‘கோலி… கோலி…’ என ஆராவாரம் எழும்பியது.
இந்த சூழலில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடப் போகிறது என்பதால், 6 மாதங்களுக்குப் பிறகு இப்போட்டியில் நவீன் உல் ஹக்கும், விராட் கோலியும் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதில் தான் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அந்தவகையில், இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனிடையே, நேற்றைய போட்டியின்போது மைதானத்திற்கு நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வந்ததிலிருந்து ரசிகர்கள் கோலி! கோலி! என கத்தி வெறுப்பேற்றினர். ஆனால் நவீன் இதனை கண்டுகொள்ளவில்லை. இதன்பின் நவீன் உல் ஹக் பந்து வீச வந்த போது விராட் கோலி பேட்டிங் செய்து வந்தார். அப்போது, மீண்டும் ரசிகர்கள் கோலி, கோலி என கத்தினர். இதனை கவனித்த விராட் கோலி உடனடியாக ரசிகர்களிடம் தயவு செய்து அப்படி செய்யாதீர்கள் என்றும் அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துங்கள் எனவும் செய்கையில் கூறினார்.
Virat Kohli asking the Delhi crowd to stop mocking Naveen Ul Haq.pic.twitter.com/Dq482rPsFU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 11, 2023
அதாவது, நவீன் உல் ஹக்கை கேலி செய்ய வேண்டாம் என சைகையால் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். விராட் கோலியின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் நிறுத்திக் கொண்டு ஆதரவளித்தனர். விராட் கோலியின் இந்த நல்ல செயல், அவற்றின் நல் உள்ளத்தை காட்டியது. இதனையடுத்து, நவீன் உல் ஹக் ஓடி வந்து, விராட் கோலியை கட்டியணைத்து இருவரும் கைகுலுக்கி சிரித்தனர். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எல்-இன் போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட கோலியும், நவீன் உல் ஹக்கும் இந்தப் போட்டியில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து நண்பர்களாக மாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் வீரர், விராட் கோலி ஒரு சிறந்த மனிதர், நல்ல வீரரும் கூட, என்ன நடந்தாலும் அது காலத்திற்குலேயே தான், களத்தை தாண்டி வெறும் ஒன்றுமில்லை. ஆனால், மக்களாகிய ரசிகர்கள் இதனை பெரிதாக்குகின்றனர். இதனால், எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளலாம் என இருவரும் கூறிக்கொண்டோம். கோலி என்னிடம் இதை இதோடு முடித்துக்கொள்ளலாம் என்று கூறினார், நானும் முடித்துக்கொள்ளலாம் என்றேன் என ஓப்பனாக தெரிவித்தார். மேலும், விராட்டை புகழ்ந்து தள்ளினார்.
View this post on Instagram