கோவிந்தா…கோவிந்தா…’லியோ’ வெற்றிக்காக படக்குழு திருப்பதியில் தரிசனம்!
லியோ திரைப்படம் வெற்றிபெற இயக்குனர் லோகேஷுடன் படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பார்க்க ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற அக்டாபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறு விறுப்பாகவும், மும்மரமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்துள்ளார். வரும் 19ஆம் தேதி ‘லியோ’ படம் திரையங்குகளில் வெளியாக உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ். இயக்குனர் ரத்னா தலைமையிலான படக்குழுவினர், பாதயாத்திரையாக நடந்து சென்று மலையேறி ஏழுமலையானை தரிசித்துள்ளனர். தற்போது, இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், நேற்று லியோ திரைப்படத்திற்கு அக்19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி, 19-ஆம் தேதி மட்டும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளும் மற்ற நாட்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தின் மூன்றாம் பாடலான ‘அன்பெனும்‘ வெளியானது. இந்த பாடலை கேட்கும்போதே மனதை உருக்கும் வகையில் இசையும் குரலும் உள்ளதால் பலருடைய பேவரைட் பாடலாக இது மாற வாய்ப்புள்ளது. இந்த பாடல் இணையத்தில் வெளியான சில மணி நேரத்தில் 50 லட்சத்திற்கும் மேல் பார்வைகளை கடந்துள்ளது.