சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்..? ஓபிஎஸ் பேட்டி..!
ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் நடத்திய ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி கோவையில் மாபெரும் மாநாடு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துளளார்.
ஓபிஎஸ்-யிடம் இரட்டை இலை கிடைக்காத போது தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவு பெற்றவுடன், அதற்குரிய பதிலை உங்களிடம் சொல்லுவோம் என தெரிவித்துள்ளார்.
பின் சசிகலா மேடத்தை எப்போது சந்திக்கபோகிறீர்கள், அவர்களை சந்திக்க ஏதாவது திட்டமிட்டுள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சசிகலாவை சந்திப்பதற்கு முன்பதாக உங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்வேன். உங்களையும் கூட கூட்டிக் கொண்டு தான் போவேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், துணை முதல்வர் என்பது டம்மி, அந்த பதவிக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது; 4 வருடம் நான் அந்த பதவியில் தான் இருந்தேன் என்றும்,
கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவுடன் நட்பு ரீதியாக பேசி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.