அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Anna University Semester Exam Result

உறுப்பு கல்லூரிகளில் 351 உதவி பேராசிரியர் காலி இடங்களை நிரப்ப வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தம் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

AICTE விதிப்படி, 16 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 351 காலி பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாகவும், அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஒப்பந்தம் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிய மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.குமரப்பன் ஒத்திவைத்தனர். 2010-11ல் மாதம் ரூ.20,000 தொகுப்பூதியத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் நியமித்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்