உங்க வீட்ல பழைய சாதம் இருக்கா? அப்போ இந்த மொறு மொறு ரெசிபியை செஞ்சு பாருங்க!
பழைய சாதம் மீதமானால் எடுத்து இனிமேல் குப்பையில் கொட்ட வேண்டாம். அதை ஒரு புதுமையான முறையில் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பழைய சாதம் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள் :
பழைய சாதம்=2கப்
வெங்காயம்=1
சீரகம்=1ஸ்பூன்
மிளகாய்த்தூள் =1ஸ்பூன்
மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை = ஒரு கைப்பிடி அளவு
கடலை மாவு =1/4கப்
செய்முறை:
சாதத்தை நன்கு மசிந்து கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க வேண்டாம். மசிந்த பிறகு அதிலே வெங்காயம் பொடி பொடியாக நறுக்கி போடவும், பச்சை மிளகாய் மற்றும் கடலை மாவு சிறிதளவு, உப்பு, சீரகம்,மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடான பிறகு மாவை பக்கோடாவாக தட்டி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இப்போது 5 நிமிடத்தில் கிரிப்ஸியான பழைய சாத பக்கோடா ரெடி.
இதை நாம் எண்ணெயில் பொரித்து எடுத்திருப்பதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் தவிர்க்கவும்.
பழைய சாதத்தை நாம் வீணாக்காமல் இது மாதிரி புதுவகையிலான முறையில் வித்தியாசமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி மறுக்காமல் சாப்பிடுவார்கள்.பழைய சாதத்தில் நிறைய ப்ரோபையோட்டிக் உள்ளது இது நம் குடலுக்கு நன்மை தர கூடியது .