பொதுமேடையில் படுமோசமாக திட்டிய மனோரமா! அனைத்தையும் மறந்து வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கமானாக திகழும் நடிகை மனோரமா. இவர் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார். இவர் 2015-ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் காலமானார். இன்று அவருடைய நினைவு தினம். இதனையடுத்து, மனோரமா சினிமா வாழ்வில் மிகவும் வருத்தப்பட்ட சம்பவத்தை பற்றி பார்க்கலாம்.

இந்த நிலையில் முன்னணி நடிகையாக இருந்த மனோரமா 1996-ம் ஆண்டு அரசியல் போர் உச்சத்துல இருந்த நேரத்தில் நிகழ்ச்சியின் பொது மேடையில் மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினியை தீட்டி பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தாராம். எனவே , அந்த சமயம் ரஜினிக்கு மார்க்கெட்டும் உச்சத்தில் இருந்த காரணத்தால் மனோரமா இப்படி பேசியதை திரையுலகம் கவனித்துக்கொண்டு இருந்தது.

இவர் ரஜினியை பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசிய அடுத்த 6 மாதங்களுக்கு சுத்தமாக பட வாய்ப்புகளே வரவில்லையாம். இதனால் மனோரமா அந்த சமயம் மிகவும் வேதனையில் இருந்தாராம். பட வாய்ப்புகள் வராமல் இருந்த 6 மாதங்களுக்கு முன்பு மனோரமாவுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. பின் பட வாய்ப்புகள் வராத காரணத்தால் வீட்டிலே இருந்தாராம்,

6 மாதங்களுக்கு மேலாகியும் பட வாய்ப்புகள் மனோரமாவுக்கு இல்லை என்று தெரிந்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் தன்னை பற்றி எவ்வளவு பேசி இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மனோரமாவுக்கு தன்னுடைய அருணாச்சலம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்தாராம். அதைப்போல, தமிழ் திரையலகம் சார்பா கலைஞர் தலைமையில மனோரமாவுக்கு பாராட்டு விழா ஒன்று நடைபெற்றபோது   அந்த பாராட்டு விழாவுக்கு மனோரமா சூப்பர் ஸ்டார் மற்றும் கமலஹாசன் இருவரையும் நேராக சென்று கூட அழைக்கவில்லையாம்.

ஆனாலும், ரஜினிகாந்த் தான் முதல் ஆளாக கலந்துகொண்டாராம். அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி  மனோரமா குறித்தும் பாராட்டி பேசி இருந்தாராம். அதில் பில்லா படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் நாட்டுக்குள்ள எனக்கொரு பேர் உண்டு…’ என்ற பாடல் காட்சி எடுக்கப்பட்டு வந்த சமயத்தில் அந்த காட்சியின் போது ரஜினி ஆடி கொண்டிருந்தாராம். அதனை பார்த்த அங்கிருந்த ஒருவர் பைத்தியம்  நன்றாக நடனம் ஆடுது என பேசினாராம்.

இதனை கேட்ட மனோரமா அவர் ஒன்னும் பைத்தியம் இல்லை தேவையில்லாமல் பேசக்கூடாது என பயங்கரமாக சண்டைக்கு சென்றுவிட்டாராம். இவனை இங்கு இருந்து அனுப்புங்கள் அப்போது தான் இந்த ஷூட்டிங் நடக்கும் என கூறிவிட்டாராம். அந்த அளவிற்கு என் மீது அவருக்கு பாசம் அதிகம் என ரஜினி மனோரமாவை பாராட்டி பேசினார். பிறகு தான் நாம் எவ்வளவு பேசியும் ரஜினி மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார். இவ்வளவு நல்லவரை இப்படி பேசிவிட்டோமே என வருத்தப்பட்டாராம். இந்த தகவலை நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்