ஜிகர்தண்டா திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாபி சிம்ஹா, சித்தார்த், விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், உள்ளிட்டோர் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அருமையான ஒரு திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருந்தார்.
படத்தில் அசால்ட் சேதுவாக நடித்திருந்த பாபி சிம்ஹா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அவரை தவிர வேறு யாரும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த அளவிற்கு நடித்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்கிற அளவிற்கு நடித்திருப்பார். இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்து நடிகர் பாபி சிம்ஹா இல்லையாம்.
முதலில் படத்தில் நடிக்கவைக்க நடிகர் ராகவா லாரன்ஸிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம். படத்தின் கதையை கேட்கும்போது அந்த காதாபாத்திரத்தில் நாம் நடித்தால் செட் ஆகுமே என்று ராகவா லாரன்ஸ் அந்த சமயம் யோசித்தாராம். பிறகு படத்தில் நான் நடிக்கவில்லை என்று ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க மறுக்க அடுத்ததாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு பாபி சிம்ஹாவுக்கு கிடைத்ததாம்.
படத்தில் நடிக்கவில்லை என்ற காரணத்தால் அந்த சமயமே ராகவா லாரன்ஸ் சற்று வருத்தத்தில் இருந்தாராம். பிறகு படத்தை ஒரு முறை தொலைக்காட்சியில் பார்க்கும்போது அடடா இந்த கதாபாத்திரத்தில் நாம் நடித்திருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டாராம். இந்த தகவலை அவர் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் விழாவில் பேசினார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார். ஆனால், இது அதனுடைய தொடர்ச்சி பாகம் அல்ல தனி கதையாக எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே.சூர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
இந்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியீட்டு செய்தியாளர்களை சந்தித்தது. அந்த சந்திபின்போது தான் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.