விஜய்யை தொடர்ந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த அஜித் …!
நடிகர் அஜித்குமார் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.பின் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்,அருகில் உதயநிதி ஸ்டாலினும் இருந்தனர்.
இதேபோல் இன்று நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்,அருகில் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.