பட்டாசு விபத்து – சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

eps vs ops

நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில்  தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரானது வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

ஈபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி நெருங்கு நிலையில் பட்டாசு விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அவர்கள், தொடர்கதையாகிவிட்ட பட்டாசு ஆளை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனுபவம் இல்லாத தொழிலாளர்கள் பணியாற்றும்போது பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்