கொரோனா காலத்திலும் கூடிய மக்கள் கூட்டம்! தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்த டாக்டர்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
டாக்டர்
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், ராடின் கிங்ஸ்லி, வினய் ராய், அர்ச்சனா, யோகி பாபு, சுனில் ரெட்டி, சிவ அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
வசூலில் வெற்றி
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 50 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர், அண்ணாத்த, மாநாடு ஆகிய படங்களுக்குப் பிறகு அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
கொரோனா காலத்தில் கூடிய கூட்டம்
இந்த டாக்டர் திரைப்படம் அக்டோபர் மாதத்திற்கு முன்பே அதாவது மார்ச் மாதமே வெளியாகவிருந்தது. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. பிறகு படம் ஒரு வழியாக அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அந்த சமயம் கொரோனா காரணத்தால் மக்கள் படத்தை பார்க்க வருவார்களா என எதிர்பார்த்த நிலையில், படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தார்கள் என்றே கூறலாம்.
தயாரிப்பாளர்களுக்கு லாபம்
கொரோனா காலகட்டத்திலும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வந்த காரணத்தால் படம் வசூல் ரீதியாக 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்தது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு 60 கோடிகளுக்கு மேல் லாபம் கொடுத்தது.
இரண்டு வருடங்கள் நிறைவு
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகளை வெளியீட்டு படம் பற்றிய விமர்சனத்தை கூறி வருகிறார்கள். படத்தின் வெற்றிக்கு கதை ஒரு பக்கம் காரணம் என்றால் மற்றோரு காரணம் அனிருத் இசை என்பதும் குறிப்பிடத்தக்கது.