#ஓசிபிரியாணிதிமுக ..!திமுக தலைமையை முடிவு எடுக்க வைத்த ட்விட்டர்…!திமுகதான் உண்மையான தலைமையா?
திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி ‘பாக்ஸர் யுவராஜ் பிரியாணி பிரச்சினையால் தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளார்.
விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி ‘பாக்ஸர் யுவராஜ் ஆவார்.இவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஒன்றுக்கு பிரியாணி வாங்கச் சென்றுள்ளனர்.அங்கு பிரியாணி வாங்கச் சென்றனர்.பிரியாணி முடிந்தது என்று கடையில் உள்ளவர்கள் கூறியதால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.இதனால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .இதன் பெயரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ ஓன்று வெளியிடப்பட்டது.அந்த வீடியோவை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஓசிபிரியாணிதிமுக என்ற ஹஷ்டாக் இந்திய அளவில் ட்ரென்ட் ஆகி வருகின்றது.
பின்னர் சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை அறிந்த திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன் என்று கூறினார்.
எனவே இந்த விவகாரமானது சமூக வலைதளமான ட்விட்டரில் இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியது.அதுவரை அமைதியாக இருந்த திமுக தலைமை ட்விட்டரில் #ஓசிபிரியாணிதிமுக என்ற செய்தி பரவியதும் அதிரடியாக திமுக தலைமை அறிக்கை வெளியிட்டு விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த யுவராஜ் மற்றும் திவாகரனை தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது.மேலும் இது தொடர்பான அறிக்கையை முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்! pic.twitter.com/Y5PdjGjeMI
— M.K.Stalin (@mkstalin) August 1, 2018
இதனால் திமுகவின் தலைமை என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை ஏறக்குறைய 80 % மேல் தீர்மானித்தது ட்விட்டர் தான்.
சமூக வலைதளங்கள் சாதாரண மக்களின் அடிப்படையை மட்டும் அல்லாமல் அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரின் அடிப்படை எண்ணங்களையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு சக்தியாக சமூக வலைதளம் விளங்கி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.