அரியலூர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..! உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைப்பு..!

death

தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் தனியார் நாட்டுப்பாட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை ராஜேந்திரன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

இந்த ஆலையில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாட்டாசு ஆலை முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிலர் அங்கிருந்து மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த நிலையில், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் ஆலை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்