காவிரி விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.!
இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தனி தீர்மானம் தொடர்பாக உரையாற்றினார்.
அவர் கூறுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், மேட்டூர் அணை சீராக திறக்கப்படுகிறது. கடந்த ஜூன் 12இல் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மே 24இல் பாசனத்திற்காக திறக்கப்பட்டது.
தண்ணீர் திறந்து விடுவதை முன்னிட்டு காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை தூர் வாரியதன் காரணமாக காவிரி நீர் கடைமடை வரை சென்று வயல்கள் செழித்தன. கடந்த வருடம் 46.2லட்சம் டன் நெல் உற்பத்தியும் , இந்த வருடம் 45.9 லட்சம் டன் நெல் உற்பத்தியும் செய்யபட்டு மிக பெரிய சாதனை படைத்தோம். உற்பத்தி பரப்பளவும் அதிகரிக்கப்பட்டது.
ஜூன் நிலவரப்படி 69.7 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணையில் இருக்கும்போதே குருவை சாகுபடி பாசனத்திற்கு திறந்தோம். மேட்டூர் அணையில் 50 டிஎம்சி உள்ள போது திறக்க வேண்டும் எனும் முறைப்படி திறந்தோம். அதனால் நீர் கடைமடை வரை சென்றனது. ஆனால் குருவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாக இருந்த போது, செயற்கையான நீர் நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது. இந்த மாதம் குறிப்பிட்ட படி அவர்கள் திறந்துவிட வில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.