இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

tn assembly 2023

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று, இன்று கூடும் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும் இந்த கூட்டத் தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து, மறைந்த முக்கிய பிரமுகர்கள் பிரகாஷ் சிங் பாதல், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

2023-24 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். காவிரி ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிடக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார். இதன்பின் கேள்வி பதில் நேரம் நடைபெறும். எனவே, சட்டப்பேரவை கூட்டம் தொடர் 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும் என்பதால், இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்