வரலாறு சாதனை படைத்த விராட்கோலி..!

Virat Kohli

உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில்  இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள்  சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழந்தார். ஜஸ்பிரித் பும்ரா வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில், ஸ்லிப்பில் விராட் கோலியிடம் மிட்செல் மார்ஷ் கேட்ச் கொடுத்தார்.

பும்ராவின் பந்து மார்ஷின் பேட்டின் வெளிப்புற விளிம்பில் அடித்து  எஸ்லிப்பில் நின்ற கோலியை நோக்கி சென்றது. அங்கு விழிப்புடன் இருந்த விராட் எந்தத் தவறும் செய்யாமல் இரு கால்களையும் காற்றில் பறக்கவிட்டு அபாரமாக டைவ் செய்து  கேட்ச் எடுத்தார். இந்த  கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கேட்ச் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் விராட் தனது பெயரில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் விராட் கோலியின் 15வது கேட்ச் இதுவாகும். தற்போது ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் பெற்றுள்ளார். கோலி தனது 15வது கேட்சை எடுத்த உடனேயே அனில் கும்ப்ளேவின் சாதனையை பின்னுக்கு தள்ளினார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக அதிக கேட்ச்களை எடுத்த வீரர்கள்:

விராட் கோலி – 15
அனில் கும்ப்ளே – 14
கபில் தேவ்- 12
சச்சின் டெண்டுல்கர் – 12

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்