இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,440-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,305-க்கும் விற்பனையானது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.50 காசு உயர்ந்து, ரூ.74.50க்கும், கிலோ வெள்ளி ரூ.74,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மாலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.42,960-க்கும், ஒரு கிராம், ரூ.5,370-க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து, ரூ.75-க்கும், கிலோ வெள்ளி ரூ.75,00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரேநாளில் தங்கம் விலை ரூ.680 அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.