ஆசிய கபடி போட்டி… இந்திய அணிக்கு தங்கம்!
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஈரான் அணிகள் இடையேயான இறுதி போட்டி நடைபெற்றது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்தவகையில், விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதனிடையே, இப்போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக வீரர்கள் வாதிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்ட பின் மீண்டும் தொடங்கிய போட்டியில் இந்திய அணி, பலவாய்ந்த ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம், இந்நதிய அணி கபடி போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் தங்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இது 28-ஆவது தங்க பத்தகமாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 28 தங்கம், 36 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 105 பதக்கங்களை பெற்று 4வது இடத்தில் உள்ளது.