மீசையை எடுக்கிறேன் சொன்னது தப்பு தான்! பதட்டத்தில் பேச்சை மாற்றிய ராஜேந்திரன்!

meesai rajendran about vijay

நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சண்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் அந்த சண்டை முடிந்த பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’  திரைப்படத்தின் வசூலை விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் முறியடித்து விடும் என்று அடுத்த சண்டை தொடங்கியது.

இதனை பார்த்த பலரும் விஜய்க்கு அந்த அளவிற்கு மார்க்கெட் இல்லை எனவும் கண்டிப்பாக ‘ஜெயிலர்’ வசூலை எல்லாம் முறியடிக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறிவந்தனர் . இருப்பினும் லோகேஷ் மற்றும் விஜய் இருவரும் ‘லியோ’ திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின்  மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் கண்டிப்பாக படம் ஆயிரம் கோடி வசூல் செய்து புயல் சாதனை படைக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகரும் சினிமா விமர்சகருமான மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் ஜெயிலர்  படத்தின் வெற்றியை பார்த்து லியோ பட குழு பயந்துவிட்டதாகவும் அந்த திரைப்படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூல் எல்லாம் முறியடிக்க வாய்ப்பே இல்லை எனவும் அப்படி முறியடித்தால் நான் என்னுடைய மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்றும் மிகவும் கெத்தாக பேசி இருந்தார்.

LEO : ஜெயிலர் வசூலை லியோ மிஞ்சினால் என் மீசையை எடுக்குறேன்! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட பிரபல நடிகர்!

அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வந்த நிலையில், மற்றொரு பேட்டியில் லியோ படம் ஜெயிலர் மற்றும் 2.0 வசூலை முறியடித்துவிட்டது என்றால் நான் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என சற்று அந்த பல்டி அடித்தர் அடித்தபடி பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து லியோ  திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்று வரும் நிலையில் மீசை ராஜேந்திரன் சற்று பதட்டத்துடன் மற்றொரு பேட்டியில் நான் மீசை எடுப்பது தவறு தான் என்று கூறியிருக்கிறார்.

லியோ படம் 2.0 படத்தை மிஞ்சினால் மீசையை எடுக்குறேன்! அப்படியே அந்தர் பல்டி அடித்த மீசை ராஜேந்திரன்!

இது குறித்து பேசிய மீசை ராஜேந்திரன் ” நான் என்னுடைய மீசையை எடுத்துக்கொள்கிறேன் என்று சொன்னது மிகப்பெரிய தவறு தான். இருந்தாலும் ரஜினி கூட விஜய்யை ஒப்பிட கூடாது. 2.0 திரைப்படம் 800 கோடி வசூல் செய்து இருக்கிறது. அதைப்போலவே லியோ திரைப்படமும் இவ்வளவு வசூல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் படம் வெளியாக போகிறது பயமா சார் என்பது போல கலாய்த்து வருகிறார்கள். மேலும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்