அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? உடனே சரியாக டீ மற்றும் ஆகாரம் ரெடி!

UlcerStomach

அல்சர் உள்ளவர்கள் பொதுவாக டீ குடிக்க கூடாது என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் நாம் இன்று தயார் செய்யும் டீ குடல் புண் மற்றும் இரைப்பை புண் உள்ளவர்கள் குடிக்கலாம். அதனை எப்படி தயார் செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் வேண்டும் என்பதை விவரமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி=1கப்
அதிமதுரம் – தேவையான அளவு
ஏலக்காய்-தேவையான அளவு
நாட்டு சக்கரை – தேவையான அளவு

செய்முறை:
கொத்தமல்லியை மிதமான தீயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு நபருக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்து இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி கொதிக்க வைக்கவும்.கொதித்த பின்பு அதிலே அதிமதுரம் பொடி 5 கிராம் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பிறகு அதை வடிகட்டி நாட்டு சக்கரை தேவையான அளவு சேர்த்து குடிக்கவும்.

டீக்கு பதிலாக தினமும் இதை குடித்து வரலாம். நல்ல சுறுசுறுப்பை கொடுக்கும். மேலும் கொத்தமல்லி பித்தத்தை குறைக்கும். உணவுக் குழலில் ஏதோ இருப்பது போன்ற உணர்வு அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு இருக்கும் இதை கொத்தமல்லி சரி செய்து விடும். மேலும்காலை நேரத்தில் ஏற்படும் குமட்டல் அதையும் சரி செய்யும்.

அதிமதுரம் தொண்டை இருமலை குறைக்க கூடியது.

அல்சரை குறைக்கும் காய்கறிகள்:

வெண்டைக்காயை -அல்சர் உள்ளவர்கள் காலை வேளையில் நாம் எடுத்து எடுத்துக்கொண்டு வந்தால் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தும். மேலும் வலியின் வீரியத்தையும் குறைக்கும்.

சுரைக்காயின் -உச்சுவரை பச்சையாக காலை நேரத்தில் பல் துலக்கும் முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இது இரைப்பை புண் பெரிதாகாமல் இருக்க உதவி செய்யும்.

2 முருங்கைக் காயை – அரைவேக்காடாக வேகவைத்து அதன் உட் சுவரை சாப்பிட்டு வரவும். காரம் எதுவும் சேர்க்கக்கூடாது.

முட்டைக்கோஸ் – மிகச்சிறந்த அல்சர் நிவாரணி ஆகும். இதை நாம் ஜூஸாக 30 ml அதனுடன் தேன் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வரவும்.

வெண்பூசணிக்கு – புண்ணை ஆற்றக்கூடிய தன்மை அதிகம் உள்ளது. இதன் உச்சுவரை அரை வேக்காடாக வேகவைத்து சாப்பிடலாம் அல்லது அரை டம்ளர் ஜூஸ் அரை டம்ளர் மோர்கலந்து தொடர்ந்து 48 நாட்கள் பயன்படுத்தி வந்தால் வலி குறையும்.குடல் எரிச்சல் குணமாகும்.

தேனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது வெதுவெதுப்பான சுடுதண்ணியில் கலந்தும் குடிக்கலாம். மிகவும் சூடான தண்ணீரில் தேனை கலந்து குடிக்க வேண்டாம். சோற்றுக்கற்றாழையை நான்கைந்து தடவை நன்றாக கழுவி உள்ளே உள்ள சோற்றை எடுத்து தேனில் நனைத்து சாப்பிட்டு வரவும். அருகம்புல் சாறு 20ml அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி சேர்த்து பல் துலக்கும் முன்பு குடித்து வரவும்.

மாதுளம் பழத்தை விட மாதுளம் பிஞ்சு மிக மிக அற்புதமான பலனை தரும் இது குடல் புண்ணை ஆற்றக்கூடிய சக்தி அதிகம். சப்போட்டா பழம் காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நடுராத்திரியில் வயிறு எரிச்சல் ஏற்பட்டால் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக் கொள்ளலாம்.சப்போட்டாவிற்கு எரிச்சலை குறைக்கும் தன்மை உள்ளது.

கொய்யாப்பழமும் சாப்பிட்டு வரலாம் அதுவும் எரிச்சலை குணமாக்கும். வாழைப்பழம் குறிப்பாக நாட்டு வாழைப்பழம் மற்றும் கற்பூர வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் அது அமிலத்தன்மையை குறைக்கும். இதற்கு புண்ணை ஆற்றக்கூடிய தன்மை உள்ளது.

சிட்ரஸ் வகை பழங்களை நாம் எடுத்துக் கொள்ளும் போது அதனுடன் தேன் கலந்து உணவு அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும். சிட்ரஸ் ஃபுரூட் என்றால் ஆரஞ்சு திராட்சை லெமன் போன்றவைகள் ஆகும். விதையுள்ள கருப்பு திராட்சைக்கு அல்சரின் வீரியத்தை குறைக்கும் தன்மை உள்ளது மேலும் புண் வராமலும் பாதுகாக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

புளிப்பு மற்றும் புளி சாதம் தவிர்க்க வேண்டும். தயிர் மோர் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். இட்லி தோசை கொடுக்கும்போது மாவு அதிகம் புளிப்பு தன்மை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். மேலும் காரம் சார்ந்த உணவுகள் எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே சாப்பிடக்கூடாது. இவற்றையெல்லாம் நாம் முறையாக பயன்படுத்தி வந்தால் அல்சரை கட்டாயமாக குணப்படுத்த முடியும். இதற்கு உணவு கட்டுப்பாடே சிறந்த தீர்வாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்