LeoTrailer: சுயநினைவுடன்தான் விஜய் நடித்தாரா? அந்த ஒரு வார்த்தையால் வெடித்தது சர்ச்சை!
லியோ டிரைலரில் கெட்ட வார்த்தை பயன்படுத்தியதை அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி கண்டித்துள்ளார்.
தளபதி விஜய்யின் ‘லியோ’ டிரைலர் நேற்று வெளியானது, தற்போது இது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. படத்தின் ஹைப் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கூஸ்பம்ஸ்-ஐ உண்டாக்கியுள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.
லியோ லோகேஷின் படமாக இருந்தாலும், விஜய்க்கு என தனி மார்க்கெட் உள்ளது. அவர், இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம்வருகிறார். நடிப்பையும் தாண்டி அவர், மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல், அவர் அரசியல் வருகை குறித்த பேச்சுவார்த்தைகள் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு அவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் மற்றும் நகர்வுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், லியோ படத்தின் டிரைலர் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதாவது இந்த டிரைலரின் ஒரு காட்சியின் போது, விஜய் ஓவர் எமோஷனலாகி ஒரு கெட்ட வார்த்தை பேசும் காட்சி இடம்பெற்றிருக்கும்.
இதனை யாரும் எதிர்பார்க்கவே இல்ல… ட்ரைலர் நன்றாக ஓடிக்கொண்டிருக்கையில், திடீரென வரும் அந்த காட்சி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்த காட்சி விஜய்க்கு தெரிந்து தான் வைக்கப்பட்டதா? அல்லது சென்சார் சென்று வந்தபோது நீக்கப்படவில்லையா? என தெரியவில்லை.
ஒரு நடிகர் மிகப்பெரிய இடத்தை பிடித்து அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லும் பொழுது, இந்த மாதிரியான செயல் அனைவரது கவனத்தையும் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக குடும்ப ரசிகர்களை கொண்ட விஜய்க்கு, பலரும் இதற்கு தங்களது கருத்துக்கள் மற்றும் வருத்தங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
ஏன்னென்றால், அவர் பேசிய கெட்ட வார்த்தை அடிப்படியானது. தற்போது, ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பயன்படுத்தற்கு விஜய்யை சமீப நாட்களாக விமர்சனம் செய்து வரும், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி கண்டித்துள்ளார்.
லியோ படத்தில் விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா என்று கேள்வி எழுப்பிய அவர், பெண்களை இழிவு செய்யும் கெட்ட வார்த்தையை பேசி, விஜய் தனது தரத்தை குறைத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ராஜேஸ்வரி தனது X தள பக்கத்தில், லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா…விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியது அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா… திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?
ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். லோகேஷ் கனகராஜ் தகுதியில்லாத இயக்குனர். திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.