கோரிக்கைகள் நிறைவேற்ற முதலமைச்சர் உறுதி.! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.!

Teachers Protest

சம வேலை சம ஊதியம் , சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை, நுங்கம்பாக்கம், டிபிஐ அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசியரியர்கள் சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பகுதிநேர ஆசிர்யர்களின் தொகுப்பூதியத்தை 10 ஆயிரத்தில் இருந்து 2500 ரூபாய் வரை உயர்த்தி 12500 ரூபாய் வழங்கப்படும், எனவும் 10 லட்சம் ரூபாய் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் வைத்த சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதனை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெற்றனர். அடுத்ததாக நேற்று காலை இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர டிபிஐ அலுவலகம் வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் இன்று தலைமை செயலகத்தில் இடைநிலை மூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் முதன்மை கல்வி அலுவலர் உடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை முடிந்து வெளியில் வந்த சங்க நிர்வாகிகள், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், எங்கள் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் ஏற்றுள்ளனர். 20,000 ஆசிரியர்கள் நலன் கருதி குழு அமைத்து 3 மாதத்தில் பரிசீலகிக்கப்பட்டு உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.  இதனை தொடர்ந்து தற்போது போராட்டம் வாபஸ் பெறுவதாகவும், மாணவர்களின் நலன் கருதி நாளை முதல் பள்ளிகளுக்கு செல்ல உள்ளளவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்