‘நான் பொதுவான ஆள்’ – இந்த கேள்வியை அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் – சபாநாயகர் அப்பாவு
நேற்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் NDA கூட்டணி சார்பாக தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். அதற்கு தற்போது அறிகுறிகள் தெரிகின்றன. என்மீது அதிமுக மட்டுமல்ல பல கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. நான் எனது பாதையில் தெளிவாக இருக்கிறேன்.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக உள்ளது . மத்தியில் நாங்கள் (பாஜக) இருக்கிறோம். 2024 தேர்தல் இதற்கெல்லாம் பதில் சொல்லும். 3வது முறையாக பிரதமர் மோடி வரவேண்டும். 2024 தேர்தல் திமுக vs பாஜக தான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்த கேள்வியை நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். நான் சபாநாயகர், பொதுவான ஆள். எனவே இந்த கேள்விக்கு நான் பதிலளிக்க முடியாது. காமன்வெல்த் மாநாட்டின் மைய கரு திராவிடமாடல் ஆட்சி என தெரிவித்துள்ளார்.