ஆகஸ்ட் 10 ஆம் தேதி கமல்ஹாசனை எதிர்க்கத் தயாரான பிக் பாஸ் காதல் ஜோடி …!காரணம் என்ன ?
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் கடந்த ஜூன் 11 ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிட்டனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் நடிப்பில் உருவான பியார் பிரேமா காதல்’ திரைப்படமும் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தான் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் பாகத்தில் போட்டியாளர்களாக இருந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா அவரின் படமான ‘விஸ்வரூபம்-2’ படத்துடன் மோதுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.