உங்க பிரிட்ஜில் இதெல்லாம் வைத்திருக்கிறீர்களா? அப்போ இனிமே வைக்காதீங்க!

Refrigerator

பழங்காலத்தில் மனிதன் உணவிற்காக மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வந்தனர். பிறகு அதை பதப்படுத்தும் முறையையும் கண்டுபிடித்தான் அதாவது மலைகளுக்கு இடையில் குளிர்ச்சியான பகுதியில் பதப்படுத்தி வந்தனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் ப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்பட்டு வருகிறது. ஆனால் அதில் எத்தனை நாள் பதப்படுத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. அதை நாம் அறியாமல் பல நாட்கள் உணவுகளை பிரிட்ஜிலே வைத்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம். அதில் எந்தெந்த பொருளை வைக்க கூடாது எத்தனை நாள் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பிரிட்ஜில் வைக்கவே கூடாத பொருட்கள் :

உருளைக்கிழங்கை நாம் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஏனென்றால் அதில் உள்ள ஸ்டார்ச் சத்து வீணாகி விடும். மேலும் அதை சமைத்து சாப்பிடும் போது இனிப்பு சுவையையும் கொடுக்கும்.

உலகத்திலேயே கெட்டுப் போகாத பொருள் என்றால் அது தேன் மட்டுமே. இதை நாம்  ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

வெங்காயம் பூண்டு போன்றவை காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது பாக்டீரியாக்கள் வளர தொடங்கி விடும்.

தக்காளியை நாம் பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவை மாறுபடும் மற்றும் அதன் தரமும் குறைந்துவிடும்.

ஊறுகாய்,ஜாம்,பிரட், மாவு பாக்கெட் போன்றவற்றை நாம் பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை. ஏனென்றால் இதிலேயே பதப்படுத்தக் கூடிய பொருள்கள் இருக்கும் எனவே வெளியில் வைத்து பயன்படுத்துவது சிறந்தது.

பூசணிக்காய் இதை நாம் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.

பழங்களில் வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் தோல் கருமையாகி கெட்டுவிடும்.

மேலும் முலாம்பழம் முழுமையாக இருந்தால் அதை பிரிட்ஜில் நாம் வைக்க கூடாது. நறுக்கிய பழம் மீதம் இருந்தால் ஒரு கவரில் போட்டு வைக்கலாம்.

இஞ்சி, ஆரஞ்சு பழம் போன்றவற்றையும் வைக்க தேவையில்லை. இஞ்சியை பிரிட்ஜில் வைத்தால் அதில் நுண்ணுயிரிகள் வளர்ந்து விடும்.

பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் வகைகள் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை.

மேலும் குழம்பு வகைகள் சட்னி வகைகள் போன்றவை மீதமானால் அதை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவோம். அவ்வாறு செய்வது மிகவும் தவறானதாகும்.

காலையில் வேலையை எளிது படுத்த நாம் இரவே காய்களை நறுக்கி பிரிட்ஜில் வைத்து விடுவோம். இவ்வாறு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி நாம் வெறும் சக்கையை மட்டுமே சாப்பிடுவோம் என்பது தான் உண்மை.

” இதையெல்லாம் இவ்வளவு நாள் நாங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து தான் சாப்பிடுகிறோம் ஆனால் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை என நினைப்பீர்கள்”.

உடனே இதன் பின் விளைவுகள் நமக்குத் தெரியாது. நாட்கள் செல்ல செல்ல நம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும்.

எந்த பொருளை எத்தனை நாள் பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்று தெரியுமா?

பொதுவாக நாம் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒரு வாரத்திற்கு மேல் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.

மாமிசம் மற்றும் இறைச்சி வகைகளை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். 3-4 மணி நேரம் போதுமானதாகும். அதிகபட்சம் ஒரு நாள். அதற்கு மேல் வைக்க கூடாது.

கீரைகள் மற்றும் காய்கறிகளை நான்கு நாட்கள் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வைத்தால் அதன் சத்துக்கள் போய்விடும். பார்ப்பதற்கு புதிது போல இருந்தாலும் ஆனால் அதில் எந்த சத்தும் இருக்காது. குறிப்பாக அதில் உள்ள நீர் சத்துக்கள் போய்விடும். இதை நாம் பிரிட்ஜின் மேல்தட்டில் வைப்பது சிறந்ததாகும்.

அடுத்தது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை கீழ்த்தட்டு மற்றும் ஃபிரீசருக்கு அடுத்து உள்ள தட்டில் வைக்க வேண்டும்.பட்டர் வகைகளை பிரிக்காமல் இருந்தால் மூன்று மாதங்கள் வரை நாம் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இட்லி மாவு மற்றும் தோசை மாவை அரைத்து ஒரு நாள் வெளியே வைத்து இயற்கையான முறையில் புளிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது சிறந்த முறையாகும். அடுத்த நாள் தான் பிரிட்ஜில்ஸ் வைக்க வேண்டும்.2-3 நாட்கள் வைத்து கொள்ளலாம்.

முட்டையின் செல்லில் சால்மோனிலா பாக்டீரியா உருவாகும் என்பதால் அதை பிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்கவும்.

சளி மற்றும் சைனஸ் தொந்தரவு இருப்பவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

நாம் பிரிட்ஜில் அதிக பொருள்களை வைக்கும் போது அதை குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படும். இதனால் கரண்ட் பில்லும் அதிகமாகும். எனவே ஃப்ரிட்ஜில் தேவையில்லாத பொருட்களை வைக்காமல், எளிதில் கெட்டுப் போகக்கூடிய பொருள்களை மட்டுமே வைத்து பயன்படுத்துவது சிறந்தது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk