5yearsofRatsasan : தமிழ் சினிமாவையே மிரள வைத்த த்ரில்லர்! ‘ராட்சசன்’ படத்தின் மொத்த வசூல் தெரியுமா?

5YearsofRatsasan

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் தரமான படங்களில் பெரிய அளவில் மக்களுக்கு பயத்தை கொடுத்த திரைப்படம் எதுவென்றால், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’. இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் மக்களுக்கு அச்சத்தை கொடுத்தது என்றே சொல்லவேண்டும்.

படத்தில் வில்லனாக நடித்திருந்த சரவணன் கிறிஸ்டோபர்  எனும் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்திருப்பார். அவரை படத்தில் பார்க்கும் போது அந்த அளவிற்கு மிகவும் பயமாக இருந்தது. அதைப்போல படத்தின் பின்னணி இசையும் காண்போரை கதிகலங்க வைத்திருந்தது என்றே சொல்லி ஆகவேண்டும்.

அந்த அளவிற்கு மிரட்டலான துல்லியமான இசையை படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்காக கொடுத்திருந்தார். இப்போது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படம் என்றால் ராட்சசன் திரைப்படம் முதலிடத்தில் இருக்கும். இந்த திரைப்படத்தில் அமலா பால், மேரி பெர்னாண்டஸ்,காளி வெங்கட், அம்மு அபிராமி  உள்ளிட்ட பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்றது போல நடித்திருப்பார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் (அக்டோபர் 5)  5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் படம் தொடர்பான காட்சிகளை வெளியீட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்த திரைபடம் எத்தனை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.

இந்த ‘ராட்சசன்’ திரைப்படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.  உலகம் முழுவது மிரள வைக்கும் வகையில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 50 கோடி வசூல் செய்து விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தமிழில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்யப்பட்டது .ஆனால், அங்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போல கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்