லியோ திரைப்படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!

லியோ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஒன்று லீக்கானதாக பரவுவதற்கு படத்தின் தயாரிப்பாளர் லலித் விளக்கம் கொடுத்துள்ளார்.
லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ஒட்டுமொத்த இந்திய சினிமாவே காத்திருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, பிரியா ஆனந்த்,உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ சென்சார்
லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு சென்சாரில் யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து படத்தில் எத்தனை கேட்ட வார்த்தைகள் இருந்தது என்பதற்கான சென்சார் சான்றிதழ் லீக் ஆனதாக ஒரு எடிட் செய்யப்பட்ட சான்றிதழ் மிகவும் வைரலானது.
சுத்தமான போய்
வைரலாகி வந்த அந்த சென்சார் சான்றிதழ் உண்மையா அல்லது வதந்தியா என தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது அது வெறும் வதந்தி எனவும் படத்தினுடைய சென்சார் சான்றிதழ் இது கிடையாது என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.
லியோ டிரைலர்
லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது. படத்திற்கு இசையை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்ற காரணத்தால் பெரிய பெரிய திரையரங்குகளில் வெளியே வைத்து ஒரு பெரிய ஸ்க்ரீன் மூலம் படத்தினுடைய டிரைலரை ரசிகர்களாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025