யாருக்காகவும் நான் அதை மாத்திக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த பவா செல்லதுரை..கண்ணீர் விட்ட பிரதீப்!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்துகொண்டுள்ளார். இவருடைய கதைக்கு என்று பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்களுக்கு பிடிக்கும் படி பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் கதைகளை கூறி வருகிறார்.
இருப்பினும் மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருக்காமல் சற்று லிமிட் ஆகவே அனைவரிடமும் பேசி தனியாகவே இருப்பது போல பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இவர் தனியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஏதோ ஒரு கும்பல் கூட்டத்தில் சாரை விட்டு விட்டீர்கள் என கலாய்க்கவும் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பவா செல்லதுரை மீது மிகவும் அன்பு கொண்டுள்ள பிரதீப் கண்கலங்கி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பிழையை பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் பவா செல்லதுரை பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பிரதீப் பிழையை பற்றி பேசியதால் நான் ஒன்னு சொல்ல விரும்புகிறேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் பவா செல்லதுரை சார்.
உங்களை என்னுடைய குருவை போல நான் பார்க்கிறேன் என கூறி சற்று எமோஷனலானார். பிறகு உங்களுடைய அறிவை நான் ரசிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வெளியே எச்சில் துப்புகிறீர்கள் அதனை ஒரு காரணமாக வைத்து இங்கு இருப்பவர்கள் உங்களை வெளியேற்றிவிட கூடாது என்று நான் விரும்புகிறேன். உங்களுடன் நான் நீண்ட நாட்கள் பயணம் செய்ய விரும்புகிறேன்.
எனவே, எனக்காக நீங்கள் தயவு செய்து அனைவரிடமும் சகஜமாக பழகி இருந்தால் நன்றாக இருக்கும் என கண்ணீருடன் பிரதீப் கேட்டுக்கொண்டார். அதற்கு பவா செல்லதுரை நான் என்னுடைய இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவே மாட்டேன். நான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த காரணம் பணம் சம்பாதிப்பதற்கு அல்ல. எனக்கு தெரியாமல் எனக்குள் எதாவது இருந்தால் அதனை இந்த பிக் பாஸ் வெளியே கொண்டு வரும் என்பதற்காக தான்.
எனவே என்னுடைய இயல்பை நான் யாருக்காகவும் எப்போதும் மாற்றிக்கொள்ளவே மாட்டேன் என தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பிரதீப் நன்றாக நடித்து மக்கள் மனதை கவர முயற்சி செய்கிறார் என கலாய்த்து வருகிறார்கள்.