பதற்றம்!! சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் மாயம்!
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இந்திய இராணுவ வீரர்கள் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, காணாமல் போன இராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், வெள்ளப்பெருக்கால் NH-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கியதால், அதிக உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நிலைமை மேலும் மோசமாகி, திடீரென 15-20 அடி உயரத்திற்கு கீழ்நோக்கி அதிகரித்ததுள்ளது.
மேலும், கனமழை காரணமாக அருகிலுள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால், அதன் சுற்றுவட்டார பகுதிகளான கஜோல்டோபா , டோமோஹானி மற்றும் மெக்லிகஞ்ச் போன்ற தாழ்வான பகுதிகள் பாதிக்கப்படலாம். எச்சரிக்கையாக இருக்கவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.