இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு.! அணுக்களை ஆராய்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு விருது.!

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல் , வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகளை நோபல் கமிட்டி வழங்கும். 2023ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு mRNAவை கண்டறிந்த 2 மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை நோபல் கமிட்டி அறிவித்தது .
இதனை தொடர்ந்து இன்று இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளை கண்டறிந்ததற்காக 3 இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, நாளை (அக்டோபர் 4) வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் (அக்டோபர் 5) இலக்கியத்திற்கான நோபல் பரிசும், வரும் அக்டோபர் 6ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. வரும் அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதர பிரிவில் நோபல் பரிசு பெறுவோரின் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025