இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை – முதல்வர்

mkstalin

சென்னை கோட்டூர்புரத்தில், இஸ்ரோவின் தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன்.  இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.  இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு.  விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள்; உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது.

இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 7.5% ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்.

தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது. விருப்பு வெறுப்பற்ற வகையில் அறிவியலை பின்பற்றுபவர்கள்.  இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த விஞ்ஞானிகள் இங்கு அமர்ந்திருக்கின்றனர்.  நிலவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திராயன் – 3 திட்டம் வெற்றியை தொடர்ந்து தமிழக விஞ்ஞானிகள் பற்றிய செய்தி கொடிகட்டி பறந்தது.  வீரமுத்து தமிழர்கள் சார்பில் வடிகட்டி பறப்பது தமிழகத்திற்கு பெருமை. தமிழக விஞ்ஞானிகள் 9 பேரில், 6 பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்