ரொம்ப சாதாரண ஆளு சார்! ‘பிக் பாஸ்’ மேடையில் கண்ணீர் வடித்த கூல் சுரேஷ்…தட்டி கொடுத்த கமல்!
பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் அனைவரையும் கமல்ஹாசன் வரவேற்று வீட்டிற்குள் அனுப்பி வைத்து வருகிறார். இந்த நிலையில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் கூல் சுரேஷ் சென்றுள்ளார். இவர் உள்ளே நுழைந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் கத்தி கரகோஷமிட்டனர்.
வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு கமல்ஹாசன் அவரைப் பற்றி கேட்டு அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது கூல் சுரேஷ் இவ்வளவு பெரிய மேடை பார்த்தவுடன் கண்கள் கலங்கி ‘நான் ரொம்ப சாதாரண ஆளு சார். நான் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்துவிட்டேன். எதாவது பெரிதாக வாய்ப்பு கிடைக்குமா என காத்திருந்தேன்.
அப்படி பட்ட எனக்கு இந்த பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. என எனக்கு பிரச்சனைகள் வரும் பொழுது உங்களை நினைத்துக் கொண்டுதான் அதிலிருந்து எழுவேன் சார். கமல் சாரே பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டு வருகிறார் உனக்கு என்ன என என்னுடைய மனதை தேற்றி கொள்வேன் சார்” என்று கண்ணீருடன் பேசியிருந்தார் .
அதற்கு கமல்ஹாசன் கூல் சுரேஷை தட்டிக் கொடுத்து உங்களுடைய நிஜப் பெயர் சுரேஷ் அந்த சுரேஷ் -ஆக இந்த வீட்டிற்குள் வாழுங்கள் நீங்கள் இப்போது இருப்பதைவிட நீங்கள் வீட்டிற்குள் இருப்பதை பார்த்து உங்களை பலருக்கும் பிடிக்கலாம்” என கூறினார். இதன் பிறகு உற்சாகத்துடன் கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு கமல் சாருக்கு வணக்கத்தபோடு என கத்தி கொண்டே வீட்டிற்குள் சென்றார்.