இன்று இடதுசாரி புரட்சியாளன் மாவீரன் சே குவேரா நினைவு தினம்…..

Default Image

பொலீவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள்.

அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர்.
சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் சே குவேரா மெல்ல கண் திறக்கிறார்.
யாரது?
தங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக அச்சத்துடன் பதில் கூறுகிறார் ஆசிரியர்.
இது என்ன இடம்?
பள்ளிக் கூடம்.

இத்தனை மோசமாக இருக்கிறதே. இங்கே எப்படி வகுப்புகள் நடத்துகிறீர்கள்? சிரம்மாக இல்லையா?
அந்த நிமிடம். அந்த நொடி அப்படியே உறைந்து போகிறார் ஆசிரியர். இவரால் இந்தச் சூழ்நிலையில் எப்படி, இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிகிறது. வார்த்தைகள் இன்றி மலைத்து நிற்கிறார் ஆசிரியர்.
கவலை வேண்டாம். ஒரு வேளை நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கூடம் கட்டித் தருகிறேன்.
கொண்டு வந்த உணவை, கீழே வைத்துவிட்டு, அழுதபடியே வெளியே ஓடுகிறார் ஆசிரியர்.

நண்பர்களே, இவர்தான் சே குவேரா. மரணத்தின் வாயிலில் நின்ற போதுகூட, பள்ளிக்கூடத்தின் அவல நிலை பற்றிக் கவலைப் பட்டவர்தான் சே. சே குவேராவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி (1967) நிறைவேற்றப்பட்டது. உலகம் போற்றும் புரட்சிப் போராளியின் மூச்சு அடக்கப்பட்டது.

இன்று தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பிலும்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பிலும் சே குவேரா நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்