எதிர்பாராததை எதிர்பாருங்கள்! ‘பிக் பாஸ் சீசன் 7’ – ல் இரண்டு கமல்ஹாசன்!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். 6 சீசன்களை தொடர்ந்து 7-வது சீசன் வெற்றிகரமாக இன்று (அக்டோபர் 1) முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கே தொடங்கி விஜய் தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஏற்கனவே, பிக் பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகி பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிகழ்ச்சி தொடங்கியவுடன் கமல் செய்த சம்பவம் இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன செய்தார் என்றால் கமல்ஹாசன் வெளியே நின்று கொண்டு அகம் டிவி வழியாக அனைத்தையும் விளக்கி மக்களுக்கு தெரிவிப்பார்.
ஆனால், இந்த முறை சற்று வித்தியாசமாக இரண்டு கமல் இருப்பது போல காட்சி எடுக்கப்பட்டு ஒரு கமல்ஹாசன் வீட்டிற்குள் திருடராக நுழைந்து கொண்டு வீட்டை சுற்றி பார்க்கிறார். இதனை அகம் டிவி வழியாக கவனித்து கொண்டு இருக்கும் மற்றோரு கமல் யோவ் யாரு யா நீ என்று கேட்கிறார். பிறகு அப்படியே வீட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இந்த முறை இருக்கிறது என்பதை அகம் டிவி வழியாகவே கமல் மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொண்டுள்ளார்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட் இதோ!
உள்ளே திருடனாக இருக்கு கமல் வெளிய அகம் டிவியில் கமல்ஹாசன் சொல்லும் வழிமுறைகள் படி ஸ்டோர் ரூம், சமையல் அறை, சிறை, என அனைத்தையும் சுற்றி பார்த்துவிட்டு பிறகு வெளியே செல்லும் அறை வழியாக செல்கிறார். ஏற்கனவே வெளியான ப்ரோமவில் இரண்டு வீடு இந்த முறை பல மாற்றங்கள் என கமல்ஹாசன் கூறிய நிலையில், வீடும் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமாக இருப்பதால் நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.