கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை! காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்
காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் ,நானும், முகுல் வாஸ்னிம் அவர்களும் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வந்தோம்.கருணாநிதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கருணாநிதி இன்னும் சில தினங்களில் நல்ல உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என நினைக்கிறேன்.கருணாநிதியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களோடு விசாரித்தோம். கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும் கூறினார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.