வேட்பாளர் தோல்வியடைந்தால் கட்சி பதவி நீக்கம்.! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!

Tamilnadu CM MK Stalin

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்க்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி , இன்று திமுக தலைமை அலுவலகமான சென்னை , அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வெளியியூரில் இருந்து கலந்து கொள்ளும் கட்சி நிர்வாகிகள் காணொளி வாயிலாக கலந்துகொண்டனர்.

திமுகவில் மொத்தம் உள்ள 72 மாவட்ட செயலாளர்களும், 234 தொகுதிகளுக்கும் உள்ள தொகுதி பார்வையாளர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாம் எதிர்பார்தத்தது போலவே நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் பற்றி தான் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளதால், விரைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கட்சி நிர்வாகிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் பணி நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றும் முதல்வர் பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுளளது.

மேலும் இதில் கட்சி நிர்வாகிகளுக்கு ஓர் முக்கிய எச்சரிக்கை பதிவும் கூறப்பட்டதாக தெரிகிறது. அதவாது,  எந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தோல்வி அடைகிறாராரோ அந்த தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்