பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொண்டுள்ளார்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட் இதோ!
பிக் பாஸ் தமிழ் 7 -வது சீசன் நிகழ்ச்சி இன்று முதல் (அக்டோபர் 1 ) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வழக்கமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இன்று முதல் நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
கலந்துகொள்ளும் பிரபலங்கள்
- கூல் சுரேஷ்
- பாடகர் யுகேந்திரன் (மலேசியா வாசுதேவனின் மகன்)
- நடிகர் பிரதீப் ஆண்டனி (டாடா, வாழ்)
- சீரியல் நடிகர் விஷ்ணு
- நடிகை மாயா கிருஷ்ணன் (விக்ரம்)
- சீரியல் நடிகை ரவீனா தாஹா
- நடிகர் சரவணா (பாண்டியன் ஸ்டோர்ஸ் )
- ஜோவிகா (வனிதா விஜய்குமார் மகள்)
- அனன்யா ராவ் ( மாடல் அழகி)
- ஐஷு (டான்சர் அமீரின் சகோதரி)
- நடிகை அக்ஷயா உதயகுமார் (லவ் டுடே)
- எழுத்தாளர் பவா செல்லதுரை
- நடிகை விசித்ரா
- ராப்பர் நிக்சன்
- பூர்ணிமா ரவி (யூடியூபர்)
- சீரியல் நடிகை வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா)
- விஜய் வர்மா (டான்ஸ் மாஸ்டர்)
- மணி சந்திரா (டான்ஸ் மாஸ்டர்)
இந்த பிரபலங்கள் அனைவரும் இந்த பிக் பாஸ் சீசன் 7-வது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளியான செய்தியை பார்த்த பலரும் இந்த முறை பிக் பாஸ் வேற லெவலில் இருக்கப்போகிறது என கூறிவருகிறார்கள்.
இரண்டு வீடு
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீடு இருக்கும் அந்த வீட்டிற்கு என்ன சண்டையெலாம் நடக்கிறது பிரபலங்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த முறை சற்று வித்தியாசமாக வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் கூட கமல்ஹாசன் இதனை பற்றி பேசி இருந்தார். எனவே, தப்பு செய்தால் சரியாக இருக்கும் வீட்டில் இருப்பார்கள் தவறு செய்தால் தண்டனையாக மற்றோரு வீட்டிற்கு அனுப்பபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை எதில் பார்க்கலாம்?
பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். அதில் பார்க்க தவறினால் நீங்கள் ஹாட்ஸ்டார் மூலமும் பார்க்கலாம். மேலும், ஹாட்ஸ்டார் மூலம் 24 மணி நேரமும் வீட்டிற்குள் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம் அதற்கான நேரடி ஒளிபரப்பும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.