வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு! கடும் அவதியில் மக்கள்!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தற்போது இந்தியா முழுக்க வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, வணிக பயன்பாடு சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் சென்னையில், ரூ.203 உயர்ந்து ரூ.1,898-ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 157 ரூபாய் குறைந்து ரூபாய்1,695-க்கு விற்பனையான செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 203 ரூபாய் உயர்ந்துள்ளது.
எனவே, இன்று முதல் தமிழகத்தில் 19 கிலோ வணிக பயன்பாடு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையானது ரூ.203-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதைப்போல, டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை இன்று முதல் (அக்டோபர் 1)முதல் ரூ. 209 ரூ.1731.50 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி ரூ.918க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்த நிலையில், இந்த மாதம் மீண்டும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.