இன்ஸ்டாகிராமில் பணத்தை அள்ளும் கெய்லி ஜென்னர்,விராட் கோலி,ரொனால்டோ ..!யார் இதில் டாப் ?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
சமீபத்தில் இது தொடர்பான கணக்கெடுப்பு நடைபெற்றது.இந்த கணக்கெடுப்பில் முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மாடலும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கெய்லி ஜென்னர் ((kylie jenner)) உள்ளார்.இவர் விளம்பரம் ஒன்றுக்கு இவர் 6 கோடியே 87 லட்சம் ரூபாய் பெறுகிறார்.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமெரிக்க நடிகை செலீனா கோமஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் போச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த பட்டியலில் 17ஆம் இடத்தில் உள்ளார்.விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதன் மூலம் பெறும் தொகை 82 லட்சம் ரூபாய் ஆகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.