மும்பை,லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் !உளவுத்துறை எச்சரிக்கை
மும்பை,லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் பயங்கரவாதிகள் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது உளவுத்துறை மத்திய அரசிற்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இவர்களுக்கு அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. செய்து வருகிறது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மும்பை,லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இவர்கள் காஷ்மீருக்குள் எல்லை கோடு வழியாக நுழைந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிலர் மனித வெடிகுண்டுகளாக மாறி இந்திய ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு மும்பை,லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.