தென்னாப்பிரிக்காவை சுருட்டி வீசியது இலங்கை – 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Default Image

தென்னாப்பிரிக்கா அணி இலங்கைக்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தோற்ற தென்னாபிரிக்க அணி கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரண்டாவது போட்டியில் இலங்கையிடம் மோதியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் பிடித்த இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 338 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மிகவும் பரிதாபமாக 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனைத் தொடர்ந்து தனது பிடியை இருக்கி பிடித்த இலங்கை 275 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

இதனால் 490 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டு நாட்கள் மீதமிருக்கையில் ஆடத் தொடங்கியது தென்னாப்பிரிக்கா. வழக்கம் போல இலங்கை மண்ணில் சுழற்பந்து வீச்சு சாதகமாக இருப்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் திணறினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்ட தென்ஆப்பிரிக்க வீரர்கள் 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் டி பயிரன் டெம்பா பவுமா ஆகியோர் மட்டுமே ஓரளவிற்கு ஆடினர்.

டி பயிரன் 101 ரன்களுக்கு அவுட்டாக்கி டெம்பா பவுமா 63 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் சீட்டுக்கட்டு போல் சரிந்தனர் தென்ஆப்பிரிக்க வீரர்கள். இதனால் 290 ஆல் அவுட்டானது தென்ஆப்பிரிக்கா அணி. இலங்கை அணி வீரர் இரண்டு போட்டியிலும் சேர்த்து 135 ரன்கள் அடித்த கருணாரத்னே ஆட்டநாயகன் விருது பெற்றார்

Dinasuvadu

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்