முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 3,120 கோடி ஊழல்..!ஆளுநரிடம் ஸ்டாலின் பரபரப்பு புகார்..!

Default Image

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம்  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  புகார் மனு அளித்தார்.

இந்த புகார் மனுவில் அவர் கூறியதாவது:-

ஜூலை 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் நாகராஜன் செல்லத்துரையின் சொந்த நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பதை ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.180 கோடி ரூபாய் பணமும், 105 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கமும் இந்த சோதனையின் போது  பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையின் சோதனைகளும், விசாரணைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தனது உறவினர்களுடன் இணைந்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  செய்த குற்றத்தின் மூலமும், தனது உறவினர்களுடன் கூட்டுச் சதி செய்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலம் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார்.

13.6.2018 அன்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மீது திமுக உறுப்பினர் ஆர். எஸ் பாரதி  சட்டவிரோதமாக அளித்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஊழல்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஆணையர் மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் ஆகியோருக்கு ஏற்கெனவே புகார் அளித்திருக்கிறார்.

3,120 கோடி ரூபாய் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல் மீதும்,  ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி அதில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன் என்று  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்