இந்தியா vs இங்கிலாந்து: உலக கோப்பை பயிற்சி ஆட்டம் மழையால் தாமதம்!

INDvsENG

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. அதன்படி, நேற்று நியூசிலாந்து – பாகிஸ்தான், இலங்கை – வங்கதேசம், ஆஸ்திரேலியா – நெதர்லாந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

கவுகாத்தியில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி போட்டியில் இலங்கை அணியும், வங்கதேசம் அணியும் மோதுகின்றன. இதில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. ஆனால்,  திருவனந்தபுரத்தில் நடக்கவிருந்த தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய பயிற்சி ஆட்டங்களில், கவுகாத்தியில் இந்தியாவை, இங்கிலாந்து எதிர்கொள்வதாகவும், திருவனந்தபுரத்தில் ஆஸ்திரேலியாவை, நெதர்லாந்து எதிர்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கவுகாத்தியில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களும் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா அறிவித்தார். ஆனால், மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மழை விடாமல் பெய்து வருவதால் போட்டி தொடங்குமா ரத்து செய்யப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபோன்று, திருவனந்தபுரத்தில் தொடர் மழை பெய்து வருவதால் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து இடையேயான பயிற்சி போட்டி பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அப்போட்டியில் டாஸ் போடவில்லை. இதனிடையே, நேற்று திருவனந்தபுரத்தில் நடக்கவிருந்த தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலககோப்பைக்கு முன்னதாக பலம் வாய்ந்த இங்கிலாந்து எதிரான இந்தியாவின் பயிற்சி போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், மழையால் போட்டி தாமதமாகியுள்ளது. தற்போ அங்கு மழை இல்லையென்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, திருவனந்தபுரத்திலும் மழை நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் போட்டி விரைவில் தொடங்கு என எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்