வழக்கு விசாரணைகள்நேரடி ஒளிபரப்பு! மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்!
மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
கடந்த ஜூலை 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை நேரலை செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் பரிந்துரைத்தார். பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தலாம் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறினார்.
இதையடுத்து உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை நேரலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் வழக்குகள் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிமுறைகளை ஜூலை 23 க்குள் உருவாக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தர விட்டது.
இந்நிலையில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.