தனது படங்களுடனே போட்டி போட காத்திருக்கும் தனுஷ்
நடிகர் தனுஷ் அடுத்தடுத்து படங்களை விறுவிறுப்பாக முடித்து வரிசையாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக தனது சொந்த தயாரிப்பான ‘வடசென்னை’ மற்றும் மாரி2′ ஆகிய படங்களும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டாவும்’ படபிடிப்புகள் முடிந்து வெளிவர காத்து கொண்டிருகிறது.
அதில் வடசென்னை முழுவதும் முடிந்தவிட்டது. சீக்கிரம் அந்த படம் குறித்த வெளியீடு அறிவிக்கப்படும்.
அதனை அடுத்து வெளிவர இருக்கும் படம் மாரி 2 வா? என்னை நோக்கி பாயும் தோட்டாவா என தெரியாமல் தவிக்கிறது. ஏனெனில் வாடா சென்னைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த படம் தனுஷின் தயாரிப்பில் உருவான படம், அது வெற்றி பெறுமாயின் அடுத்து எந்த படம் வெளிவரும் என்பதில் சிக்கல் உள்ளது அடுத்து மாரி2வும் தனுஷ் தயாரிப்பு அதலால் அவர் என்னை நோக்கி பாயும் தோட்டாவை வெளியிட விடுவாரா அல்லது மாரி 2வையே வெளியிடுவாரா என குழப்பத்தில் வெளியீட்டு தரப்பு உள்ளது.
எந்த படம் வெளிவந்தாலும் கதைகளம் நன்றாக இருந்தால் அணித்து படமும் வெற்றிபெறும் என்பதில் மாற்றமில்லை.
Dinasuvadu.com