ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் : பாஜக முடிவு

Default Image

நாடாளுமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது. 

இத்தகவலை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்த் குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் குழந்தைத்தனமானதாக உள்ளது, என விமர்சித்த அமைச்சர் அனந்த் குமார், அவர் முதிர்ச்சி  இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது, என்றும் கடுமையாக விமர்சித்தார்.

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.

பிரதமர் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்னை பார்க்க தவிர்க்கிறார் அவர் 15 லட்சம் மற்றும் 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றிவிட்டார் .இது மட்டுமில்லை பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன தேசத்துக்கு எதிராக மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கிறது .பின்னர் அவையில் பேசிக்கொண்டே இருந்தவாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் சென்று அவரை கட்டிப் பிடித்தார்.இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் அதிக விலை கொடுத்து போர் விமானங்களை மோடி அரசு வாங்குவதாகவும் இதனால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “இந்தியா பிரான்ஸ் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என பிரான்ஸ் அதிபர் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்” என்று பேசினார்.கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடனிருந்தார். என்றும் பிரதமர் மோடி கொடுக்கும் அழுத்தத்தால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் பேசுகிறார் ” ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறினார்.

நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்ததன் மூலம், அவையின் உரிமையை ராகுல் காந்தி மீறியுள்ளார், என்றும் குற்றம்சாட்டினார். மேலும், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்றதால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர, பாஜக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர், என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தான் பேசும்போது நிலநடுக்கம் உருவாகும், என்று ராகுல் காந்தி முன்பு கூறியதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் அனந்த் குமார், ராகுல் கூறியபடி காங்கிரஸ் கட்சியில் தான், விரைவில் நிலநடுக்கம் வரும் என்றார். இதனிடையே, நாடாளுமன்றத்தில் பிரதமரை ராகுல் காந்தி கட்டியணைத்தது அவை நடவடிக்கைகளை மீறிய செயலாகும் என்று, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest