AsianGames2023: 9 தங்கத்துடன் 35 பதக்கங்கள்.! பட்டியலில் 5ம் இடத்தில் இந்தியா.!

medal list

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 23ம் தேதி, 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி, இன்றுவரை 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. பிக் லோட்டஸ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஹாங்ஜோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கில் இதற்கான தொடக்கவிழா நடைபெற்றது.

அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட பல போட்டிகளில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகள் அனைத்தும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடைபெறுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய அணி சார்பாக 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், 7வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தற்போதுவரை 9 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்று, இந்தியா பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. முன்னதாக 4 வது இடத்தில இருந்த இந்தியாவை விட, உஸ்பெகிஸ்தான் ஒரு பதக்க வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், சீனா 107 தங்கம், 65 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என 204 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல, ஜப்பான் 28 தங்கம், 36 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் என 102 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கொரியா 27 தங்கம், 28 வெள்ளி மற்றும் 53 வெண்கலம் என 108 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 10 தங்கம், 11 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. இந்தியா இன்று மட்டும் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)